ஆஸ்திரியாவின் வியன்னா நகரில், 28 வயதான ஆசிரியை ஒருவர், தனது பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 17 வயது முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட உறவில் ஈடுபட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து, தொடர்ந்து பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
2024ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. அதில் சில காட்சிகளை மாணவர் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்த வீடியோக்களை மாணவர் மற்ற நண்பர்களிடம் பகிர்ந்ததையடுத்து, 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட மாணவர் கும்பல் ஆசிரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இவர்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ரொமேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆசிரியை வீட்டை விட்டு வெளியேறும் சுதந்திரமின்றி, வீட்டிலேயே தங்கி பல மாதங்கள் போதைப்பொருள் பதுக்கல், பணமோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள், “நாங்கள் குற்றவாளி கும்பல், உன்னுடைய வீடியோக்களை வெளியே விடுவோம்” என மிரட்டி, ஆசிரியை மீதான பாலியல் வன்முறையை தொடர்ந்துள்ளனர். அவரிடம் உணவு, கார் வாடகை, மதுபானம் உள்ளிட்ட தேவைகளுக்காக பணமும் பறித்துள்ளனர்.
இவர்களது கொடூரம் தொடர்ந்து வந்த நிலையில், ஒருநாள் ஆசிரியையின் வீட்டையே தீவைத்து, அங்கு இருந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட ஆசிரியை, பலமாதங்கள் அச்சத்தில் இருந்த பிறகு, இதுபற்றி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர் கும்பல் “எல்லாம் ஆசிரியின் சம்மதத்துடன் நடந்தது” என மறுப்புப் பதிலளித்துள்ளனர். ஆனால் தீவைத்த சம்பவத்தில் தங்களை ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சிக் குற்றவழக்கு அக்டோபர் 15ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
