தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் நம்பிவேல் (28) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவரும் சேர்ந்து முத்தையாபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். அப்போது, கிருஷ்ணனை முந்தி கொண்டு சென்று, நம்பிவேல் மதுவாங்கி சென்றதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணன், அவரது நண்பர் சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து சுனாமி காலனியில் நின்று கொண்டிருந்த நம்பிவேலை அடித்து உதைத்துள்ளார்கள். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த நம்பிவேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.