அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போனவை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 300 மாடுபிடி வீரர்களும் 1000 காளைகளும் இந்த போட்டியில் களம் இறங்கினர். மேலும் 7 மருத்துவ குழுக்கள், 20 மருத்துவர்கள் உள்ளிட்ட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் சூர்யா-யும் பங்கேற்றார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “உலக புகழ் பெற்ற நம் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அன்பிற்கினிய சகோதரர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் மற்றும் மற்ற மதிப்பிற்குரிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கண்டுக்களித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! வீரம் நிறைந்த மண்” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கின்றார்.