இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் தென்னிந்தியாவில் சிறந்த மற்றும் பிரபலமான நடிகர்களில் நடிகர் சூர்யா முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கடந்த வருடம் நவம்பர் முதல் டிசம்பர் வரை 6000 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு நம்பிக்கை, அடையாளம் தெரிதல், கவரும் தன்மை, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர்களில் சூர்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதன் பிறகு ஆய்வில் நம்பிக்கை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவர கொண்டா முன்னிலை வகிக்கின்றனர். தமிழில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் முன்னிலையில் இருக்கிறார்கள். அதன் பிறகு மலையாள சினிமாவில் பகத் பாஸிலும் கன்னட சினிமாவில் கிச்சா சுதீப்பும் முதலிடத்தில் இருக்கிறார்கள். மிகவும் அடையாளம் காணப்பட்ட நடிகர்களின் பட்டியலில் நடிகர் சூர்யா தான் முதலிடத்தில் இருக்கிறார். நடிகர் சூர்யா தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரையும், தமிழில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார்.

இதில் கன்னட சினிமாவில் நடிகர் யஷ்ஷும், மலையாள சினிமாவில் பிரித்திவிராஜ் சுகுமாரும் முதலிடத்தில் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களின் பட்டியலில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவர கொண்டா ஆகியோரை பின்னுக்கு தள்ளி நடிகர் சூர்யா முதலிடத்தில் இருக்கிறார். மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களில் தமிழில் நடிகர் விஜய் முன்னிலை வகிக்கிறார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் மிகவும் நம்பிக்கையான  நட்சத்திரங்கள் பட்டியலிலும் நடிகர் சூர்யா தான் முதலிடத்தில் இருக்கிறார். இதில் தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் முதலிடத்தில் இருக்கிறார்கள். மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடிகர் யஷ் முதலிடத்திலும், 2-ம் இடத்தில் கிச்சா சுதீப்பும் இருக்கிறார்கள். மேலும் அகில இந்திய அளவில் இந்தியாவின் மிகவும் நம்பிக்கையான நட்சத்திரங்களில் அமிதாப்பச்சன் முதலிடத்தில் இருக்கிறார்.