தமிழக பாஜகவில் அண்மைக்காலமாகவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாகஜாவிலிருந்து விலகி திமுக மற்றும் திமுக என திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். பாஜக சிடிஆர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். நிர்மல் குமார் விலகியதில் இருந்து பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மதுரவாயலில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகியது அண்ணாமலைக்கு பேரிடியாக வந்து விழுந்துள்ளது.