தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றி கடந்த மாதம் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் “முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகளுடனான இந்த ஆலோசனையில் பெண்களுக்கான மாதம் ரூபாய்.1000 திட்டத்துடன், புதிய திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக பேச்சு நடைபெறுகிறது. இதன் காரணமாக ரூ.1000 அறிவிப்பு மட்டுமல்லாமல் புதிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.