
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் அரசன் பொன்ராஜ்,
18ஆண்டுகள் ஆண்டுகள் அரசியலில் எத்தனை போராட்டங்களை நாம் கண்டிருக்கின்றோம் ? சமத்துவ மக்கள் கட்சி மக்களுக்காக….. மக்கள் பணிக்காக…. மக்களுடைய நிலையை உணர்ந்து எத்தனை போராட்டங்களை எடுத்து வைத்திருக்கின்றோம். இன்றைய தினத்திலே படித்தவர்கள் அதிகம். இந்த படித்தவர்கள் எல்லாம் இன்டர்நெட் மூலமாக நம்முடைய சமத்துவ மக்கள் கட்சியை ஒரு நொடியில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எப்படி எல்லாம் செயலாற்றுகின்றார்கள் ? இந்த இடத்தில் எவ்வளவு திறமை வாய்ந்த தலைவர் இருக்கின்றார் ? அற்புதமான ஒரு தலைவரை பெற்றிருக்கக் கூடிய சமத்துவ மக்கள் கட்சியானது…. இன்றைய தினத்தில் மக்கள் யோசிக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு தலைவர்…. ஏழு மொழி பேசக் கூடியவர். அருமையான ஒரு தலைவரை பெற்று இருக்க கூடிய சமத்துவ மக்கள் கட்சியை நாம் விரும்பும் என்று அத்தனை படித்தவர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கணிதம் படித்தவர்கள்… திறமையானவர் என்று அத்தனை படித்தவருக்கும் தெரியும்….. இன்னைக்கு நாம பார்த்தோம்னா…..
எத்தனை எத்தனை விஷயங்களை காண்டித்து நாம் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்.கூடங்குளம் மின்சார தேவைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இருக்கின்றோம். விவசாயிகளுக்காக…. டெல்லியில் போய் போராட்டம் நடத்து இருக்கின்றோம்… அத்தனையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேர்தல் என்று வருகின்ற போது நாம் அத்தனையும் மறந்து பணநாயகம் பக்கம் மாறி விடுகிறார்கள் நம் மக்கள்…. இந்த பணநாயகத்தை மறந்து நேர்மையான முறையிலே நாம் ஒரு தேர்தலை நாம் சந்தித்தோம் என்று சொன்னால், நிச்சயமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தான் முதலிலே ஆட்சியிலே அமரும் என்று இன்றைய நேரத்தில் நான் கூறிக் கொள்கின்றேன்.