அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற – பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தின் கதாநாயகனாம்…. வெள்ளி திரையில் பல படங்களில் கதாநாயகனாம்….. தமிழகத்தில் நாளைய தமிழகத்தின் முதல்வராக வீற்றிருக்கும் நமது நாட்டாமை அவர்களை வணங்கி,  மேலும் ஒரு சில தினங்களில் இந்த இடத்தை மக்கள் வெள்ளத்தால் நிறைத்து….. அண்ணே தமிழ்நாட்டுல எங்கு சென்றாலும் தலைவரின் புகழ் தெரிய வேண்டும்.

இந்த கூட்டத்தை மாநாட்டாக மாற்றி காட்ட வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு,  இரவு – பகழ் பாராமல்….  எனக்கு தெரிந்து அவர் நேத்து ஒரே ஒரு ஒரு மணி நேரம் தான் தூங்கிருப்பாரு…. அது கூட தூங்குறான்னு தெரியல….. அந்த அளவுக்கு தலைவரின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று சிறப்பாக செயல்பட்டு, பட்டி தொட்டி எங்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்த தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளராக வீற்றிருக்கும்  எங்கள் அன்பு அண்ணன் சுந்தர் அண்ணன் அவர்களே….

மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் மாநில பொருளாளர் அன்பு அண்ணன் சுந்தரேசன் அண்ணன் அவர்களே மற்றும் இங்கு  வரவேற்புரை ஆட்சி அமர்ந்திருக்கும் அருமை சகோதரர்களை, மாநில நிர்வாகிகளே, மாவட்ட செயலாளர்களே,  பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர்களே அனைவருக்கும் இரவு வணக்கத்தினை உரித்தாக்குகிறேன்.

மழை வருதுன்னு பயப்படாதீங்க…. ஒரு நாள் நனையுறதால ஒன்னும் ஆக மாட்டோம். நாட்டாமை வந்தா மழை பெய்யும்.  நாட்டாமை வந்தா வெள்ளாமை விளையனும்லாங்க… அப்புறம் என்னங்க எந்திரிக்கிறீங்க…. உட்காருங்க….. மழையில ஒன்னும் ஆக மாட்டோம்….  மழையில் நாட்டாமையே உட்கார்ந்து இருக்கிறார்,  அதெல்லாம் கவலைப்படாதீங்க….  மழை  வரலன்னா என்றால் தான் அதிசயம்…..  நாட்டாமை பாதம் பட்டால் வெள்ளாமை விளையும்….. கண்டிப்பா மழை வரும்….

நீங்க பொட்ட காடாக இருந்தா கூட அந்த இடம்  வெள்ளாமை  விளைஞ்சு, பச்சை பச்சென்று ஆயிரும்….  அப்படிப்பட்ட தலைவர் நம் தலைவர்….  நீங்க நல்லா நினைச்சுக்கோங்க….  ஒரு நல்ல மனிதர்…… அடுத்தவங்க மனச குளிர வைத்தே பார்த்த ஒரு மனிதர்….. அவர் இன்னைக்கு நெல்லையில் கால் வைத்திருக்கிறார் என்றால்,  இந்த மண்னு  குளிராமையா போகும்…. கண்டிப்பா குளிரும் என பேசினார்.