கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஆளுங்கட்சி தான் பிரதமரை சந்திக்கணும். நாங்க சந்திச்சு என்ன பண்ண முடியும் ? ஒரு ஆளு கட்சியாக இருந்தால்….

அந்த ஆளுங்கட்சியில அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் என்னென்ன சேதம்  என்று கொடுத்தா தானே மத்திய அரசு கொடுக்கும்…..  நாங்கள் எதை வைத்து கொடுக்க முடியும்….  பத்திரிக்கையில் வருகின்ற செய்தி….  ஊடகத்தில் வர செய்தி….  மக்கள் கொடுக்கின்ற கருத்து இதை வச்சுதான் நாங்க உங்க முன்னால பேட்டி கொடுத்துட்டு இருக்கோம்.

நேரடியா பார்க்கிறோம்…. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை ஊடகத்தின் வாயிலாக…. இந்த அரசினுடைய கவனத்துக்கு  கொண்டு போறோம்….  மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு போறோம்….  அதை இந்த அரசு செயல்படுத்த வேண்டும். இனியும் மெத்தனமா  இருக்கக் கூடாது. நீங்க தானே பார்த்துட்டு இருக்கீங்க…  நீங்களே எல்லாம் சொல்லிட்டீங்க..

நான் கேட்கிற கேள்வியை நீங்களே சொல்லிட்டீங்க….  இவ்வளவு மந்திரி இருக்காங்க…..  இவ்வளவு ஐஏஎஸ் ஆபீஸர் இருக்கிறாங்க… அப்படி இருந்தும் பசி, பட்டினியில் மக்கள் வாடுறாங்க…. இது  தான் உண்மை. எங்கேயுமே மக்களை போய் பார்க்கவில்லை….  எல்லா அமைச்சருக்கும் வந்தாங்க…. அவர் சொன்ன மாதிரி…

நம்முடைய நிருபர் சொன்ன மாதிரி….    நீங்க இங்கே இருக்கீங்க… நான் அங்க இருந்து வந்தேன்…. உங்களுக்கு நல்லா தெரியும்….. யார் எங்க போனாங்க ? யார் என்ன பார்த்தார்கள் ? என்று உங்களுக்கு தெளிவாக தெரியும்….  நீங்க வச்சிருக்கிற அந்த கருத்தின் அடிப்படையில் இங்கே அமைச்சர்கள் எல்லாம் வந்தது உண்மைதான்…..  இன்னைக்கு விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டா வந்து பார்த்துட்டு போனது உண்மைதான்….

மக்களுடைய பிரச்சனையை அவரு  பார்க்கல… மக்களுடைய கஷ்டங்கள்,  துன்பம் ,துயரம், வேதனை…. துடித்து கொண்டு இருக்கின்ற மக்கள் உடைய  கஷ்டத்தையும் அவர் சிந்திக்கவில்லை.. ஏதோ வர வேண்டும் என்று வந்தாரு…. பார்க்க வேண்டும்  என பார்த்தாரு…  இப்ப இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை போயிட்டாரா இருக்கிறாரா ? இல்லையான்னு தெரில.. அவ்வளவுதான் வந்தாரு… பார்த்தாரு… போயிட்டாரு…. இதுதான் அவருடைய பணி என தெரிவித்தார்.