அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சண்முகம் கணேசன்,

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்ததற்கு பின், விடியல் வந்ததோ…. இல்லையோ…..  எங்கள் தூத்துக்குடியில் ஒரு சூரியன் உதித்து,  ஒரு பெரிய விடியலை இன்று காலையில் கண்டிருப்பீர்கள்….  கீழ்வானம் சிவந்தது போல….  பதினொரு மணி அளவிலே சூரியன் உதித்தது தூத்துக்குடியில்…..  மதியம் நெல்லை வந்து சேரும்போது…. ஏரியாவே பரபரப்பாகிட்டு…. காலையிலிருந்து மழை வந்துரும்……

9ஆம் தேதி பெரிய மழை வந்துரும்னு சொல்லி மிரட்டிட்டு இருந்தது வானிலை எல்லாம்….  ஆனால் அந்த வருண பகவான் கூட,  நமக்கு இடையூறாக இருக்க கூடாது அப்படிங்கிறதற்காக…  இரண்டு,  மூன்று மணி நேரம் நமக்காக காத்திருக்கிறது என்றால்,  அந்த வர்ண பகவான் வானத்திலிருந்து தலைவரை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறான் என்று தான் அர்த்தம். காரணம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்….

நெல்லையில் நிற்கப்போவது யார் ? நெல்லையை வென்றெடுக்க போவது யார் ? என்பதை தமிழகத்துக்கு உணர்த்தி காட்டுவதற்காகவே இந்த பொதுக்கூட்டத்தை எங்களது மாநில ஒருங்கிணைப்பாளர்,  அண்ணன் சுந்தர் அவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்…. காரணம் இந்த இடம் முடிவு செய்யப்பட்டதே  இரண்டு நாளைக்கு முன்பாக தான்….

இப்படி இரண்டு நாள் நேரத்திலே இப்படி  சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்து…  அதிலும் எங்களுடைய சூரியனைக் கொண்டு அமர வைத்து….  வருகின்ற காலத்தில் தமிழகத்தில் நாங்கள் தான். நாங்கள் முடிவு செய்தால்தான் இந்த ஆட்டை ஆள முடியும் என்ற   அச்சாரமாக இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் நமது புரட்சி திலகம் நாட்டாமை அவர்கள் என தெரிவித்தார்.