தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நோயிலிருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற திரைப்படத்திலும், சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய வலைதள பக்கத்தில் அவருடைய வீட்டில் லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவை இல்லை. உங்களை நம்பிக்கை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருப்பதோடு நல்ல ஆசிரியராகவும், நண்பராகவும் மாற்றும். மொத்தத்தில் நம்பிக்கை மட்டும் தான் உங்களை சூப்பர் ஹியூமன் ஆக மாற்றும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தாவின் இந்த பதிவுக்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ்களை வருகிறார்கள்.