தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு.  அந்த வகையில் சீரியல்களில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று  சன் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் சன் டிவி.யில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு பிரபலமான சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் என்ற சீரியலும், ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இந்த  2 சீரியல்களின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்தடுத்து முடிவுக்கு வரும் இரண்டு சன் டிவி சீரியல்கள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Sun NXT - Watch Movies Online, Watch TV Shows, News Online