தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறினார் நடிகை அமலாபால். சினிமா உலகத்திற்கு அறிமுகமாகி சிறிது காலத்திலேயே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன்பின் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். பின் சில வருடங்களையே இருவரும் விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் ஒரு காதலில் சிக்கி அதுவும் தற்போது பிரிவில் முடிந்தது. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அமலா பல் தற்போது மன அமைதியை தேடி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அமலா பால் இந்து மதத்தை மீது அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றார். இவர் அண்மையில் பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது பாலிதீவில் இருக்கும் ஒரு ஆசிரமத்திற்கு சென்று தங்கி இருக்கின்றார். அங்கு இயற்கை உணவு, யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்கின்றார். அங்கு எடுத்துள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுரிக்கின்றார்.