தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக அதன் முதல் போட்டியின் நடைபெறும் இடமான ராஞ்சிக்கு வந்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ராஞ்சிக்கு வரும் முன் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் சுனில் குரோவர் கலந்து கொண்டுள்ளார். சுனில் குரோவர் மேடையில், 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவைப் போலவே நடித்து நகைச்சுவை செய்து, அரங்கில் இருந்த அனைவரையும் கலகலக்க வைத்துள்ளார்.
he’s literally me but as a 21 year oldpic.twitter.com/UF1ylI7gYR
— beteljuice (@pleasechuphojaa) November 28, 2025
இந்தச் சமயத்தில் விராட் கோலி தன்னுடைய சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தொடர்ச்சியான சிரிப்பால், விராட் கோலி நாற்காலியில் சாய்ந்து, பின்னர் உடனடியாக எழுந்து தனது விலா எலும்புகளைத் தேய்க்கத் தொடங்கியுள்ளார். இதைக் கண்ட சுனில் குரோவர், “எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்க, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கௌரவ் கபூர், “சகோதரர் இரண்டு நாட்களில் மேட்ச் விளையாட வேண்டும். சிரிப்பால் விலா எலும்புகளை உடைத்து விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகக் கூறியது அரங்கில் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ராஞ்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன், விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியின் வீட்டிற்குச் சென்று இரவு விருந்தில் கலந்து கொண்டனர். ராஞ்சியில் இந்திய அணி விளையாடும்போதெல்லாம் தோனி பெரும்பாலும் வீரர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம். விருந்து முடிந்த பிறகு, தோனியே தனது காரை ஓட்டி விராட் கோலியைத் திரும்ப ஹோட்டலில் கொண்டு போய் விட்டார்.
ஓட்டுநர் இருக்கையில் தோனியும், அருகில் விராட் கோலியும் அமர்ந்து பயணித்த இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி, ரசிகர்களால் ‘இந்த ஆண்டின் சிறந்த சந்திப்பு’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, இம்மாதம் 37 வயதை நிறைவு செய்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் எடுத்து ஃபார்முக்குத் திரும்பியிருந்தாலும், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.
