சமூக வலைதளங்களில் நாம் தினமும் பல வகையான வீடியோக்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு. அந்த வரிசையில், கிரிக்கெட் மீதான அளவுகடந்த வெறியை வெளிப்படுத்தும் இளைஞர்கள் குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சில இளைஞர்கள் பிளாஸ்டிக் மட்டையையும் பந்தையும் கொண்டு கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

இதில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையிலும் விளையாடுவதுதான் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒரு இளைஞருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் ஒரு கையால் மட்டும் பேட்டிங் செய்கிறார். மற்றொரு இளைஞர் காலில் ஏற்பட்ட காயத்திற்காகப் கட்டுப் போட்ட நிலையிலும், ஒரு காலைத் தூக்கிப்பிடித்தவாறே சிரமப்பட்டு ஓடுகிறார்.

உடல் காயங்களைப் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் மீதான தங்கள் தீராத காதலை வெளிப்படுத்தும் இந்த இளைஞர்களின் வீடியோ, சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை ‘@ramdevkar07’ என்ற எக்ஸ் (X) தளப் பயனர், ‘கிளென் மேக்ஸ்வெல் யார்?’ என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு கால் மட்டும் சரியாக இருந்த நிலையில், தனியாளாகப் போராடி இரட்டைச் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுடன் ஒப்பிட்டே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள், ‘தேசிய கிளென்’ என்றும், “இவர்களுக்கு என்ன ஒரு தீவிர ஆசை ” என்றும் கமெண்ட் செய்து, அவர்களது விளையாட்டிற்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.