1998-க்குப் பிறகு ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்ல முடியாமல் இருந்த தென்னாப்பிரிக்கா, சமீபத்தில் டெம்பா பவுமா தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. தற்போது, இந்தியாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை 2-0 எனத் தோற்கடித்து டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது. பவுமா தலைமையில் ஆடிய 12 டெஸ்டில் தென்னாப்பிரிக்கா ஒரு தோல்வியையும் சந்திக்கவில்லை.

​இந்தச் சாதனையைத் தொடர்ந்து, முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், பவுமாவை இந்தியாவின் எம்.எஸ். தோனியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். “பவுமா அமைதியாகப் பேசக்கூடியவர்; அதிகம் குரலை உயர்த்த மாட்டார். இது அப்படியே தோனியைப் போன்றது. தோனி அமைதியாக இருப்பார், ஆனால் அவர் பேசும்போது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். இதுதான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை” என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.