இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு விசித்திரமான காணொளி வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. ரயிலில் பயணம் செய்தபோது இருக்கை (Seat) தொடர்பாக இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் ரயிலின் மேல் இருக்கையில் (Upper Berth) அமர்ந்திருக்க, கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் ஆத்திரத்தில் அவரது காலைப் பிடித்துக் கீழே இழுக்கிறார். சண்டை இத்துடன் முடியாமல், கீழே இருந்த நபர் மேலே இருந்தவரின் காலில் ஆக்ரோஷமாக கடிக்கவும் செய்கிறார்.
எதிர்பாராத இந்த ‘கடி’ வைத்தியத்தால் ஆத்திரமடைந்த மேல் இருக்கை நபர், பதிலுக்கு அவரைத் தாக்க, இருவருக்கும் இடையே பயங்கர மல்லுக்கட்டு நடக்கிறது. ரயிலில் இருந்த மற்ற பயணிகள் எவ்வித பயமும் இன்றி, ஒரு சினிமா பார்ப்பது போல இந்த விசித்திரமான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த ‘கடி’ சண்டை காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, “என்னப்பா இது ரயிலுக்குள்ள சாம்பியன்ஷிப் போட்டி நடக்குதா?” என நெட்டிசர்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
