பரம எதிரிகளான பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் (Snake vs Mongoose) சண்டைக் காட்சிகள் அடங்கிய பரபரப்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தச் சண்டை அடர்ந்தக் காட்டுப் பகுதியில் நடக்காமல், நடுச் சாலையிலேயே நடந்ததால், அங்குப் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
View this post on Instagram
சாலையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் வந்த ஒரு விஷப் பாம்பும் கீரிப்பிள்ளையும், உடனே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டன. சிறிது நேரத்தில், கீரிப்பிள்ளை மின்னல் வேகத்தில் பாம்பின் தலையைப் பிடித்து, ஒரே அடியில் அதனைக் கொன்றுவிடுகிறது.
அதன் பிறகு, அந்தச் செத்தப் பாம்பை இழுத்துச் சென்றவாறு கீரிப்பிள்ளை அங்கிருந்துச் சென்ற காட்சி, அங்கிருந்த வாகன ஓட்டிகளையும், பார்வையாளர்களையும் பெரும் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த அதிரடி வீடியோ இதுவரை 8 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
