சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்காடு பகுதியில் கழுகு நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயலில் இருந்து பாம்பை கவ்விக்கொண்டு உயரமாக பறந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் ஒயரில் பாம்பின் உடல் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பும், கழுகும் உயிரிழந்தன.
இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சார இணைப்பைத் துண்டித்து ட்ரான்ஸ்பார்மரில் சிக்கி இருந்த பாம்பு மற்றும் கழுகின் உடல்களை மீட்டு அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து உடல்களை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் புதைத்தனர்.