கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு காட்டில் 58 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 6 குழுக்களாக உலா வருகிறது. நேற்று காலை போட்டிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதே போல் கெலமங்கலம் அருகே காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.