
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி தொடங்குவதற்கு முன்பாக 1988ல் அந்த காலத்திலே வன்னியர் சங்கம் மாநாடு புதுவையிலே நடைபெற்றது. அந்த மாநாட்டி 17ஆவது தீர்மானம்… ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புரட்சியாளர் இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று கட்சி தொடங்குவதற்கு முன்பாக ஒரு தீர்மானம். பிறகு கட்சி தொடங்கி 1989இல் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.
அதன் பிறகு அரசியல் மாநாட்டிலே மீண்டும் தீர்மானங்கள். முதல் முதலாக புரட்சியாளர் இமானுவேல் சேகரனாருடைய கல்லறை சென்று…. அங்கு மரியாதையை செலுத்த சென்ற நேரத்தில் அங்கு பார்த்தால் வெறும் சாக்கடை, துர்நாற்றம், குப்பையாக இருக்கிறது. இப்படி ஒரு தலைவர் ? அடையாளமே தெரியலையே… எங்கே இருக்கிறது என்று தெரியாமல்?
30 ஆண்டுகளுக்குப் பிறகு… அதன் பிறகு அதை சுத்தம் செய்ய சொல்லி…. முதன் முதலில்அங்கு மரியாதை செலுத்தி…. பிறகு அய்யாவுடைய சொந்த பணத்தை கிட்டத்தட்ட 15 லட்சம் நான் அமைச்சராக இருப்பதற்கு முன்பாக…. 15 லட்சம் அந்தக் காலத்தில்…. பணத்தை கொடுத்து, இது ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று ஒரு பொறியாளரிடம் அந்த பணி ஒப்படைத்தார்கள்.
அதுல நான் டிராய்யிங் எல்லாம் பார்த்து…. பவுண்டேஷன் எப்படி பண்ணனும் ? ஸ்ட்ரக்சர் எல்லாம் எப்படி பண்ணனும்? ஆலோசனை எல்லாம் கொடுத்தேன் நான். அது எல்லாம் கட்டி ஆண்டுதோறும் ஐயாவும் மரியாதை செலுத்தி பிறகு…. இப்போ அரசியல் கட்சிகள் அரசியலுக்காக மரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்…. உணர்வுபூர்வமாக யாரும் செய்யில்லை. அவங்களுக்கு என்ன ? ஓட்டு வேணும், அவ்வளவுதான் என பேசினார்.