பள்ளிகளில் அழுகிய முட்டை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், பிள்ளைகள் என்ன குரல் எழுப்பிடுவாங்க அப்படிங்கறது தான். ஏழு நாள் அல்லது அஞ்சு நாள்ல உப்மா தானே. நாங்க எல்லாம் சினிமா எடுக்கும் போது கம்பெனி எப்படிப்பா ? என கேட்பாங்க உப்புமா கம்பெனி ? என சொல்லுவோம். இது ஒரு உப்மா கம்பெனி. 60 வருஷம் ஆண்டுட்டீங்க…

காலையில் உணவில்லாமல் பிள்ளைகள்  படிக்கிற நிலைமையில் தான் என் வீட்ல ஏழ்மை, வறுமை இருக்குன்னா… அப்போ நான் என்ன சொல்றது ? குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலைமையில நாங்க இருக்கிறோமா,  என்ன சொல்றது?

அழுகுன முட்டை கொடுக்குறீங்களே… உங்க வீட்டு பிள்ளைகளை போல  நாட்டுப் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியலைன்னா… இதை  விட்றலாம். இந்த திட்டத்தை கைவிட்றலாம். சனாதனம் என்றால் என்ன ? என ஒரு வரையறைக்கு வரணும் வரணும். வர்ணாஸ்ரம தர்மம் வேற சனாதனம் வேறு என்கிறார். அதுல என்ன வேறுபாடு இருக்கிறது? பிறப்பின் அடிப்படையில்…

மானுடல் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன்,  தாழ்ந்தவன் என்று பேதம்  பார்க்கின்ற  முறைக்கு பெயர் தான் சனாதனம், வர்ணாஸ்ரம கோட்பாடு. தலையில பிறந்தவன்… நெத்தியில பிறந்தவன்.. தோல்ல பிறந்தவன்… தொடையில் பிறந்தவன்… கால்ல பிறந்தவன்…. எவனாவது ஆத்தாளுக்கும்,  அப்பனுக்கும் பிறந்திருக்கானா ? சொல்லுங்க…  இந்த நூற்றாண்டில்….. இந்த அறிவியல்…  விஞ்ஞான வளர்ச்சி  உலகத்தில் இந்த  கோட்பாடு எல்லாம் நம்பிட்டு அலையனும்னா எப்படி ? என்ன கோட்பாடு இது என ஆவேசமானார்.