திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, கடைசியில் ஒன்றே ஒன்றுதான்… நிறைய பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம் என்னவென்றால், நான் இப்ப குஜராத்தி மொழி படிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்,  மராத்தி மொழி படிக்க கத்துக்கிட்டு இருக்கிறேன். ஏனென்றால் தமிழ்நாட்டுக்கு தெரிந்த விஷயம் குஜராத்திக்கு தெரிய வேண்டாமா ?

திரு. நரேந்திர மோடி குஜராத் மக்களுக்கு எந்த அளவிற்கு துரோகம் செய்கிறார் என்பதை குஜராத் மண்ணில் போய், குஜராத் மக்களிடம் பேச வேண்டாமா ?தமிழ்நாட்டு மக்களிடம் போய் தமிழ்ல பேசி என்ன செய்ய ? எனவே குஜராத்தி  கற்றுக்கொண்டு…. மராத்தி  கற்றுக்கொண்டு… என்னென்ன மொழிகள் என்னால் கற்றுக் கொள்ள முடியுமா, கற்றுக்கொண்டு அந்த மக்களிடம்2024 தேர்தலுக்கு முன்னாடி போய் பேச வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணர்கிறேன்.

இந்த மேடையில் நான் ரொம்ப பேச வேண்டியது இல்லை. இன்னும் ஒரு நிமிடம் தான்..  ஜனநாயகம் கல்வியோடு சம்பந்தப்பட்டது. அதை புரிந்து கொள்ளுங்கள். கல்வி இருந்தால் தான் விழிப்புணர்வு இருக்கும். விழிப்புணர்வு இருந்தால் ஜனநாயகம் பலமாக இருக்கும்.ஜனநாயகம் பலமாக இருந்தால் நாம் சுதந்திரம் காக்கப்படும். கல்வி மறுக்கப்பட்டால் விழிப்புணர்வு போகும். ஜனநாயகம் பலவீனமாகும்.  ஜனநாயகம் பலவீனமானால் நம் சுதந்திரம் நம்மை விட்டு போய்விடும்.  நாம் அடிமையாகி விடுவோம்.

பன்னாட்டு நிறுவனங்கள் நம் மூளையை தயார் செய்கின்ற பொறுப்பு ஏற்கிறது, அதுதான் கோச்சிங் சென்டர்.  மல்டிநேஷனல் கம்பெனி. அது தான் கோச்சிங் சென்டர். அப்போ  பன்னாட்டு நிறுவனம் என் மூளையை தயார் செய்கிறது என்று சொன்னால்,  பன்னாட்டில் நிறுவனத்திற்கு சாதகமாக தான் என் மூளை வேலை செய்யுமே தவிர, என் மூளை இந்திய மூளையாக  இருக்காது. என் மூளை இந்தியனுக்கான  மூளையாக இருக்காது என தெரிவித்தார்.