
தமிழகத்தில் பேரிடராக அறிவிக்காத நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இருந்து 6.23 லட்சம் கோடி வரியாக செலுத்தி உள்ளோம். அவுங்க 6.93 லட்சம் கோடி கூடுதலாக கொடுத்துள்ளோம் என சொல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான்,
எங்க கொடுத்தாங்க ? யாரு கிட்ட கொடுத்தாங்க ? இப்போ நம்ம இப்படி பேசுவோம்… மத்திய அரசு ( சென்ட்ரல் கவர்ன்மெண்ட்) மாநில அரசு (ஸ்டேட் கவர்மென்ட்) என ரெண்டு பேரு…. நீ கவர்மெண்ட் நடத்துறியா ? கந்து வட்டி நடத்துறியா ? என் வரியை எடுத்துட்டு போயிட்டு, திரும்பி மாசம் மாசம் உனக்கு தேவைப்படும்போது நான் கொடுக்கிறேன்னா…. உன் வேலை என்ன ? உனக்கு ஒரு வேலையும் இல்லையா ?
நீ ஏன் என்வரியை எடுத்துட்டு போயிட்டு, திரும்ப பிரிச்சு தரணும். அந்த வரியை நீயே வச்சுக்கிட்டு நிர்வாகம் செய்யனு சொல்லத் தெரியாதா ? உனக்கு…. வேலையில்லாம வேலை பாத்துட்டு இருக்கியா ? நீ கந்து வட்டி நடத்திட்டு இருக்கியா ?
என் வரியை எடுத்துட்டு போயிட்டு…. திருப்பி நான் கெஞ்சனும்…. அப்பறம் நாங்க தான் தந்தோம்ன்னு சொல்லணும்… என்ன உங்க காசா ? மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசு மத்திய அரசுக்கு நிதி. மத்திய அரசு வருவாய் பெருக்கத்துக்கு ஒன்னு சொல்லுங்க….
எல்.ஐ.சி இருந்தது, அதிலும் 60 விழுக்காடு பங்கை வித்துட்ட…. இந்த நாட்டின் பொதுசொத்து, இதன் மூலமாக வருவாய் பெருக்கம்…. அப்படின்னு நடுவண் அரசுக்கு யாராவது சொல்லுங்க ? இதன் மூலமா வருதுன்னு…. நாங்க கொடுக்கிற காசு…. அதை வாங்கி வச்சுக்கிட்டு சேட்டை தானே... பேரிடர் காலங்கள்ல கூட நான் உன்கிட்ட பிச்சை எடுக்கணுமா என ஆவேசமானார்.