தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு தற்போது மூன்றாம் பருவத்தில் உள்ள நிலையில் டிசம்பர் மாதம் நடந்த அரையாண்டு தேர்வுகளுக்கு பிறகு விடுமுறைகள் அளிக்கப்பட்ட ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஜனவரி 25 முதல் 28 வரை தைப்பூசம் மற்றும் குடியரசு தினம் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனவரி 29 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் பிப்ரவரி மாதத்தில் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று பிறகு மார்ச் மாதம் முதல் பொது தேர்வுகள் தொடங்க உள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைகள் என எதுவும் கிடையாது. எனவே மாணவர்கள் இனிவரும் நாட்களில் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியது அவசியம். பொதுத்தேர்வுகளைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் இறுதியில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படும்.