தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் ஒரே ஆசிரியர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் காலியாக உள்ள 2800 ஆசிரியர் காலி பணியிடங்கள் முதல் கட்டமாக நிரப்பப்பட உள்ளது.மேலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான மதிப்பீட்டை ஜூலை 1ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.