அமெரிக்காவின் லூசியானாவைச் (Louisiana) சேர்ந்த 45 வயது லீன் எம்மாரினோ (Leane Emmerling) என்ற பெண், தனது 14 வயது மகளின் பள்ளித் தோழர்களுக்கு சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட் (Snapchat) மூலம் நிர்வாணப் படங்களை (Nude Photos) அனுப்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லீன் எம்மாரினோ, 14 முதல் 15 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களுக்குத் தனது நிர்வாணப் படங்களை அனுப்பி அவர்களைத் தனியாகச் சந்திக்க அழைத்ததுடன், பாலியல் உறவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், ஸ்னாப்சாட் செயலி மூலம் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கில் லீனின் மகளே தனது தாய்க்கு எதிராகச் சாட்சியம் அளித்ததால், நீதிமன்றம் அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
