மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டம் உத்தரபராவில், 16 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியான திபன்கர் அதிகாரி, அங்கு திடீரென நுழைந்துள்ளார். சிறுமியின் காதலனும் திபன்கரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
அந்தத் தொழிற்சாலையில் வைத்து, சிறுமியின் காதலனும் திபன்கரும் சேர்ந்து அந்தச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி திபன்கர் மற்றும் சிறுமியின் காதலன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆளுங்கட்சி நிர்வாகியே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
