ராஜஸ்தானின் பாரம்பரியத் தலைப்பாகை அணிந்த ஒரு சிறுவன், சாலையோரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மேஜிக் காட்டுகிறான். கையில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு அவன் செய்யும் வித்தைகள் பார்ப்பவர் கண்களை நம்ப முடியாமல் செய்கின்றன.

ஒரு சுற்றுலாப் பயணியின் கையில் நாணயத்தைக் கொடுத்து மூடி வைக்கச் சொல்லும் அந்தச் சிறுவன், அடுத்த நொடியே அந்த நாணயத்தை அங்கிருந்து மறையச் செய்து, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு வெளிநாட்டவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டுகிறான்.

 

View this post on Instagram

 

A post shared by Mr. ᴊᴀɢᴅᴇᴇsʜ BHEEL (@bheel_jagdeesh98)

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தச் சிறுவன் முறையான கல்வி கற்காத சூழலில் இருந்தாலும், வெளிநாட்டுப் பயணிகளுடன் மிகவும் சரளமாகவும், தன்னம்பிக்கையுடனும் ஆங்கிலத்தில் உரையாடுகிறான்.

அவனது ஒவ்வொரு மேஜிக் வித்தைக்கும் அந்தச் சுற்றுலாப் பயணிகள் வியப்பில் வாய் பிளக்கின்றனர். “திறமை என்பது படிப்புக்கோ, வசதிக்கோ அடிமை இல்லை” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சிறுவனின் வீடியோ, சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.