செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், பிஜேபி கொடியை மாநில தலைவர் வீட்டுக்கு முன்னால் இருந்து எடுப்பார்கள் என்றால் ? நாங்கள் திரும்பி என்ன கேட்கிறோம்  என்றால் ? இது இந்துக்களுக்கு மத்தியில் ஒரு மத வெறுப்பை உருவாக்குமா ? உருவாக்காதா ? அப்ப இஸ்லாமியர்கள் கணிசமா இருக்குற பகுதியில பாரதிய ஜனதா கட்சியினுடைய கொடியை வைக்கக்கூடாது என்று சொன்னால் ?

ஹிந்துக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியில் எஸ். டி.பி.ஐ கொடியை வைக்கக்கூடாது. அதை காவல்துறை எடுக்கலன்னா…  பாஜக நிர்வாகி தூக்கி எறிவான்  என்ற நிலையை உருவாக்குகிறார்களா? தமுமுக,  மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இவர்களெல்லாம் எங்க கட்சி நடத்துறாங்க ? என்ன பாகிஸ்தான்ல கட்சி நடத்துறாங்களா ?

இல்ல சவுதி அரேபியா கட்சி நடத்துறாங்களா ? 85%   ஹிந்து மக்கள் வாழக்கூடிய இந்த தமிழகத்தில் இஸ்லாமியர்கள் கணிசமா இருக்கக்கூடிய இடத்துல பாரதிய ஜனதா கட்சியின் கொடியை வைக்க கூடாது. இந்த மண்ணின் கலாச்சாரத்திற்காகவும்,  எல்லா மக்களையும் சம அளவில் போற்றப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு கட்சியினுடைய கொடியை வைக்கக்கூடாது.

அதுல இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் எதிர்ப்பார்கள் என்று காவல்துறை மும்மரமாக செயல்பட்டால் ? அப்ப 85 சதவீதம் இந்துக்கள் வாழக்கூடிய இந்த தமிழகத்தில்…. பெரும்பான்மை இந்துக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் எந்த இஸ்லாமிய அமைப்போ, கட்சியோ, கொடியை ஏற்ற கூடாது என்று முடிவெடுக்குமா ? அப்படி ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்…  காவல்துறை அதற்கு உடன்படுமா ? என சீறினார்.