
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் மாநிலத் துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் பேசும்போது,
ஊருக்காக உழைத்தார், அவர்களுக்காக உழைத்தார்…. அதேபோன்று காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த திரு ஜிகே ஐயா மூப்பனார் அவர்கள் துவங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காக சைக்கிள் சின்னத்தை தமிழகம் முழுவதும் பரப்பி, அந்த ஆட்சிக்காக உழைத்த ஒரே உத்தம தலைவர் நம்முடைய தலைவர். அதேபோல் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும், தாமரை மலர்ந்தே தீர வேண்டாம் என்று….
இன்று பரப்புரையாற்றுகின்ற அவர்களுக்கு முன்னால் திரு அத்வானி அவர்களை வைத்து…… தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அந்த பாரதிய ஜனதா…. இன்று ஆளுகின்ற பாரத ஜனதா ஆட்சிக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் நம்முடைய தலைவர்…. அதேபோல் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் மக்கள் பணி சரியாக செய்யவில்லை என்று அந்த இயக்கத்தை விட்டு வெளியே வந்து, அன்றைய இரும்பு மங்கை…. புரட்சித்தலைவி…. மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவரை, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தவர் நம் தலைவர்.
எங்கு நாம் இருக்கின்றோமோ, அந்த தான் ஆட்சி. இந்த முறை கூட சொல்றேன்…. நாமள அவங்க கூப்பிடல…… கூப்பிடலன்னா எதுக்காக கூப்பிடலன்னு நினைக்காதீங்க….. நம்ம மேல ஒரு பயம்…. அன்பு, அறிவு, ஆற்றல், உண்மை, உழைப்பு, உயர்வு, ஏழு மொழி பேச தெரிந்த வித்தகர்….. சட்டமன்றத்திலே அந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மையார் ஆட்சி காலத்தில்…… சட்டமன்றத்தில் அதிகமான கேள்விகணைகளை எழுப்பிய ஒரே ஒப்பற்ற தலைவர் நம்முடைய தலைவர். அந்த பயம்…. அந்த பயம் இருக்குது இப்போ…..
அதனால தலைவர் எடுத்திருக்கின்ற இந்த முடிவு எங்களை எல்லாம்….. நாங்க எல்லாம் சாதாரண ரசிகர் மன்றத்திலிருந்து வந்த ஆளுங்க…. எங்களை எல்லாம் சட்டமன்றத்திற்கு, பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று இவ்வளவு பெரிய பிரமாண்டமான கூட்டத்தை ஏற்பாடு செய்து…. இன்று பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிக்க காத்திருக்கும் எங்கள் தலைவனை வணங்கி, வணங்கி, வணங்கி வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி என பேசி முடித்தார்.