தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆடிப் போன தமிழக அரசு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.