மேற்குவங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஃபால்டா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஜகாங்கீர் கானின் மனைவி நூர்ஜஹான் பேகம் தலைமையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இப்பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் தங்களை அச்சுறுத்துவதாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தைக் கலைக்க சிஆர்பிஎஃப் வீரர்கள் திடீரென லத்திக் சார்ஜ் நடத்தினர்.
A mob led by Jahangir Khan’s wife targeted the Falta Police Station to FORCIBLY FREE arrested TMC leader Jahangir Khan.
Swift ACTION by the West Bengal Police brought the situation under CONTROL, completely DISPERSING the mob within few seconds 🔥 pic.twitter.com/or2b1sBcV8
— Avinash K S🇮🇳 (@AvinashKS14) June 16, 2026
“>
இதனால் பாதுகாப்புப் படையினரின் இந்த அதிரடி தடியடியால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தடியடியில் இருந்து தப்பிக்கவும், தங்களைக் காத்துக் கொள்ளவும் பயந்துபோன பல போராட்டக்காரர்கள் அருகில் இருந்த சாக்கடைக் கால்வாயில் குதித்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தப் படையினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
