மகாராஷ்டிராவின் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவக் உள்கட்டமைப்பில் உள்ள மோசமான குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மற்றுமொரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் ஒரு குக்கிராமத்திற்கு உரிய நேரத்தில் 108 அவசரக்கால ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேராததால், பிரசவித்த சில மணி நேரங்களிலேயே இளம் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாலை வசதி இல்லாததும், உரிய நேரத்தில் அவசர மருத்துவ உதவி கிடைக்காததுமே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், நிர்வாகத்தின் மீதான கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அறிவித்தபோதிலும், கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அவை இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதை இந்தத் துயர நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்நிலையில் பிரசவக் காலத்தில் பெண்களுக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டிய அவசரச் சிகிச்சைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், இன்னும் பல உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இனியாவது அதிகாரிகள் விழித்துக் கொண்டு, இதுபோன்ற கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகளையும், தடையற்ற ஆம்புலன்ஸ் சேவைகளையும் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
