உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில், சமூக ஊடக ரீல்ஸ் போதைக்காக இளம் தம்பதியினர் செய்த ஆபத்தான சாகசம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர் கோத்வாலி பகுதியில் உள்ள புகழ்பெற்ற பெல்ஹா தேவி கோவில் படித்துறையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டுத் தலத்தில், சேகர் என்ற வாலிபர் தனது பைக்கை கைகளில் தூக்கிப் பிடிக்க, அவரது மனைவி சினிமா பாணியில் அந்த பைக்கின் மீது அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இதனால் ஒரு புனிதமான மத வழிபாட்டுத் தலத்தில், தங்களின் சுய விளம்பரத்திற்காகவும், லைக்குகளுக்காகவும் இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டது பரவலான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த சாகச வீடியோ வைரலானதை அடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், ஆன்மீகத் தலத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் செயல்பட்ட இந்த தம்பதியினர் குறித்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.