சமூக ஊடகங்களில் சில நொடிகள் கிடைக்கும் தற்காலிகப் புகழுக்காகவும் ‘லைக்குகளுக்காகவும்’ இன்றைய இளைஞர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிரையே பணையம் வைக்கும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருகிறது.

மேலும் அதற்கு சான்றாக, தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் வாசலில், வெளியே தலைகீழாகத் தொங்கியபடி மிகக் கொடூரமான முறையில் ஸ்டண்ட் செய்கிறார்.

“>

இந்தச் செயலில் உள்ள முட்டாள்தனம் என்னவென்றால், ஒரு நொடி பிடி நழுவியிருந்தாலோ அல்லது ரயிலின் வேகம் தடுமாறியிருந்தாலோ, அவர் தண்டவாளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கக்கூடும். இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், வெறும் சமூக ஊடகப் புகழுக்காக இளைய தலைமுறை தங்கள் வாழ்க்கையோடு விளையாடுவதைக் கண்டு மிகுந்த கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆபத்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதுபோன்ற உயிரைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலரும் இந்த வாலிபரின் செயலை ‘வீரம் அல்ல, வெறும் முட்டாள்தனம்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஏனெனில், இத்தகைய ஆபத்தான ஸ்டண்டுகள் அதைச் செய்பவருக்கு மட்டுமல்லாமல், ரயிலில் பயணிக்கும் மற்ற பயணிகளின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக முடிகிறது. ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் இதுபோன்ற ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வந்தாலும், இளைஞர்கள் தங்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.