உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், பெற்ற தாயின் கள்ளக்காதலனால் 7 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு, கால்வாயில் வீசிக் கொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் முதற்கட்ட விசாரணையில், அச்சிறுவனின் தாயுடன் இருந்த கள்ளத்தொடர்புக்கு அந்த குழந்தை இடையூறாக இருந்ததால், அவனைக் கொலை செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. சிறுவன் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
उत्तर प्रदेश –
मेरठ में HDFC बैंक ऑफिसर अर्पित शर्मा 7 साल के बच्चे अंगदवीर को कार में बैठाकर ले गया और उसे जिंदा ही नहर में फेंक डाला !!दरअसल, आरोपी अर्पित इस बच्चे की मां से शादी करना चाहता था। प्रेम संबंध में बाधक बनने पर अर्पित ने ऐसा कदम उठाया। आरोपी गिरफ्तार है। नहर में… pic.twitter.com/eXEOinzWlX
— Sachin Gupta (@Sachingupta) June 17, 2026
“>
இதனால் புகாரின் பேரில் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான நபர் அச்சிறுவனைக் கூட்டிச் செல்லும் காட்சிகள் சிக்கின. உடனே அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவன் குழந்தையைக் கடத்திச் சென்று ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் உள்ள கால்வாயில் வீசிக் கொன்றதை ஒப்புக்கொண்டான்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளியைக் கைது செய்த போலீசார், சிறுவனின் உடலை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
