டெல்லியில் உள்ள மகிபால்பூர் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது, அங்கிருந்த டெல்லி காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டர் அனில் சர்மா என்பவர் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காவல்துறை அதிகாரியின் பொறுமையான அணுகுமுறைக்காகப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வாலிபரை அச்சுறுத்தாமல், அவரிடம் மிக நிதானமாகப் பேசி, முதலில் அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
सूझबूझ, धैर्य और साहस का परिचय देते हुए दिल्ली पुलिस के SI अनिल शर्मा ने महिपालपुर फ्लाईओवर पर आत्महत्या का प्रयास कर रहे एक युवक की जान बचाई।
मौके पर पहुंचकर SI अनिल शर्मा ने युवक को बातचीत के जरिए शांत किया, उसे पानी पिलाया और अपना मोबाइल देकर उसका ध्यान भटकाया।
उचित अवसर… pic.twitter.com/Jm8c6bc7AZ— Delhi Police (@DelhiPolice) June 16, 2026
“>
பின்னர் அவருக்குக் குடிப்பதற்குக் குடிநீர் வழங்கி, தனது மொபைல் போனையும் அவரிடம் கொடுத்து அவரது கவனத்தை முழுமையாகத் திசை திருப்பியுள்ளார். சரியான தருணத்திற்காகக் காத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் அனில் சர்மா, அந்த வாலிபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரைப் பலமாகப் பிடித்து மேம்பாலத்தின் விளிம்பிலிருந்து பாதுகாப்பாகப் பின்னோக்கி இழுத்தார்.
இந்நிலையில் அருகில் இருந்த மற்றவர்களும் உடனடியாக ஓடிவந்து அந்த வாலிபரைக் மீட்டனர். பதற்றமான சூழலிலும் அவசரப்படாமல், மிகவும் பொறுமையாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டு ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றிய தனது அதிகாரியின் துரித நடவடிக்கையை டெல்லி காவல்துறை மனதாரப் பாராட்டியுள்ளது.
