சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கலைஞரான திவாகர் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சா, 104 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திவாகர் பெங்களூர், மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடிக்கடி சென்று போதை பொருட்களை வாங்கி வந்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் இளம்பெண்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
