திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், வரலாற்றில் நெப்போலியனை நேருக்கு நேர் எதிர் கொண்ட பிரிட்டிஷ் படையின் தளபதி சொல்லுகிறான்….. நான் நெப்போலியன் உடன் போரிட்டு இருக்கிறேன். ஆனால் திப்போடு போரிட முடியவில்லை என்று பதிவு செய்து இருக்கிறார். தன்னை மன்னன் என்று அழைப்பதை காட்டிலும் தான், இந்த நாட்டின் குடிமகன் என்று தன்னை அழைத்துக் கொண்ட மகத்தான தன்னடக்கத்திற்கு சொந்தக்காரன் மாவீரன் திப்பு.

அவருடைய வரிகளை எல்லாம் நான் தொகுத்த இத்தனை செய்திகளையும் வெறும் துண்டறிக்கையின்  தலைப்பு பக்கத்திலேயே மிக சுருக்கமாக இந்தப் பேரவை குறிப்பிட்டிருக்கிறது. உண்மையிலேயே நான் இவ்வளவு செய்திகளை எல்லாம்… பக்கங்களை எல்லாம் படித்து குறிப்பு எடுத்து வருவதற்கு பதில்,  இந்த துண்டறிக்கை என் கைகளில் கிடைத்திருந்தால்  இவ்வளவு சிரமப்பட்டு இருக்க மாட்டேன். அவர் சொல்லுகிறார்….  நூறாண்டு குள்ளநரியாக வாழ்வதை விட,  ஒரு நாள் சிங்கமாக வாழ்ந்து மடிந்து விடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முஸ்லிம் அல்லாத எந்த மக்களையும் மதம் மாறும் படி ஒருபோதும் திப்புவின் ஆட்சிக்காலத்தில் நிர்பந்தம் செய்ததில்லை.  அல்லாவை மானசிகமாக ஏற்றுக் கொண்டவர்கள் இஸ்லாமியத்தை தழுவலாமே தவிர,  திப்புவின் மிகப்பெரிய அரசாங்கம் நடைபெறுகிறது இஸ்லாமிய மன்னர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மன்னர் ஆட்சி கொண்டிருக்கிற இந்த காலத்தில்…  இஸ்லாமியர்கள் உடைய கொள்கை – கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு ஏனைய பிற மக்கள் இஸ்லாம் தழுவ வேண்டுமென்று தன் ஆட்சிக் காலத்தில் எங்கும் நிர்பந்திக்கப்படவில்லை என்று வரலாற்றுப் பக்கங்கள் பதிவு செய்திருக்கிறது.

ஆனால் இன்றைக்கு ஆண்டு கொண்டு இருக்கிற நரேந்திர மோடி சொல்லுகிறார்… ஒற்றை மொழி இந்தி என்றுகிறார்…  ஒற்றை மதம் இந்து என்கிறார்…..  ஒற்றை ரேஷன் அட்டை என்கிறார்…. ஒற்றை பண்பாடு என்கிறார்….ஒற்றை கலாச்சாரம் என்கின்றார்….ஒற்றை உணவு முறை என்கின்றார்.. மாட்டுக்கறி என்பதன் பெயரால் மனிதத்தை படுகொலை செய்கிற இந்த பயல்களுக்கு எல்லாம் எங்கள் மாவீரன் திப்பு சுல்தான் வீரம் சிறந்த விடுதலைப் போராட்ட பக்கங்களில் புதைந்து கிடைக்கின்ற மறைக்கப்பட்ட இந்த வரலாறுகளை இந்த சங்கிப் பயல்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒரு இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கிறது என தெரிவித்தார்.