டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மெட்ரோ நிறுவனம் நிறுவன நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மெட்ரோவில் பயணம் செய்வோருக்கு ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போன் பே, பேடிஎம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்வதற்கு மட்டும் டிக்கெட் விலை ஐந்து ரூபாய் ஆகும். மற்ற முறைகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது