ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, 1967ஆம் ஆண்டு திமுக கழகம் உதயசூரியன் சின்னம் பெரிய வெற்றி பெற்றது. அடுத்தபடியாக 1971-ஆம் ஆண்டு அதைவிட மிக பெரிய வெற்றியை பெற்றது. அதற்குப் பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் பெற்ற வெற்றி என்பது அவருடைய தலைமையின் கீழ் புதிய சின்னத்தில் தான் வெற்றி பெற்றார்.

அதே மாதிரி இன்னைக்கு நாம பார்க்கணும்னா….  தமிழ் மண்ணில் லீடர்ஸ்க்கு தான் ஓட்டு. மக்கள் திலகம் எம்ஜிஆர் தொண்டர்கள், எம்ஜிஆர் மீது பற்று கொண்டவர். அதே வேளையில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா பெருந்தகைக்கு அடுத்தபடியாக மக்கள் திலகம் MGR 1962 ஆம் ஆண்டு தலைவராக மாறி வெற்றி பெற்றது  உண்மை.

அந்த வகையில் தான் 1977 அரசியல் முடிவு அமைந்தது. இரண்டு தலைவர்கள்…  ஒன்று மக்கள் திலகம் எம்ஜிஆர், இன்னொன்று கலைஞர் கருணாநிதி. அதுல மக்கள் திலகம் எம்ஜிஆர் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு பெரிய தலைவராக…  கலைஞர் கருணாநிதியை விட அதிக வாக்குகளை பெற்ற ஒரு தலைவராக மிளிர்ந்தார். அதே மாதிரி பட்ட ஒரு சூழ்நிலைதான் இன்னைக்கு அண்ணா திமுக தொண்டர்கள் மத்தியில இருக்குது.

கால சூழ்நிலைல  சில இடர்பாடுகள் வந்தாலும் கூட, அந்த தொண்டர்கள் மனசுல இவர்  நல்ல மனிதர். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாக்கு பிறகு இந்த கட்சியை வழி நடத்துறதுக்கு தகுதியானவர் என்கின்ற எண்ணம் கண்டிப்பா இருக்குது. இதை நான் மட்டும் சொல்லல. என்கூட இருக்கின்ற…

என்னுடைய அரசியலலை ஆழ்ந்து பாக்க கூடிய நண்பர்கள்…  நாகர்கோயில் கோபால்,  கே.எஸ் மணி போன்ற நண்பர்களும் இந்த கருத்துக்களை தெளிவா சொல்லுறாங்க. நிச்சயமா அவர் பின்னால ஒரு கூட்டம் நிக்கும். வாக்காளர்கள் அவரை தான்  நம்புவார்கள் என்று களத்துல இருந்து அரசியலை பேசக்கூடிய பல நண்பர்களும் சொல்லுறாங்க என தெரிவித்தார்.