பிரபல நடிகரான சல்மான்கான் “கிசி கா பாய் கிசி கா ஜான்” எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். இவருடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிக்கும்போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பல வதந்திகள் பரவியது. இதுகுறித்து பூஜா கூறியதாவது “நான் ரன்வீர் சிங்குடன் நடித்த சர்க்கஸ் படத்தை அதிக அளவில் எதிர்பார்த்தேன்.
எனினும் அது தோல்வியில் முடிந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். இப்போது சல்மான்கான் உடன் நடித்த படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் இருவர் பற்றியும் கிசுகிசுக்களும் சேர்ந்து பரவி வருகிறது. நான் தற்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். சல்மான்கான் உடன் தன்னை டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் அறிந்தேன். இருப்பினும் அது உண்மையில்லை” என கூறியிருக்கிறார்.