சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறு திரைப்படங்களை டைரக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூர்யா-42 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியானது இன்று காலை 9:05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் “கங்குவா” என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் கங்குவா படம் 2024 ஆம் வருடம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.