தமிழ் சினிமாவிற்கு கடந்த 1988 ஆம் வருடம் வெளியாகிய தர்மத்தின் தலைவன் எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் குஷ்பு. இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் குஷ்பு. அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பது மட்டுமின்றி அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியை சந்துள்ளார். அதோடு தனது மாமியார் தோனிக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் குஷ்பு பகிர்ந்து, “ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பிறக்கின்றனர். அதை தோனி நிரூபித்து உள்ளார். எங்கள் சிஎஸ்கே தல தோனியை பாராட்ட வார்த்தைகள் இன்றி இருக்கிறேன். அவர் தன்னுடைய மாமியாரை சந்தித்தார். நன்றி” என பதிவிட்டுள்ளார்.