தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவிற்குள் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நடித்தும் வரவேற்பு கிடைக்காத நிலையில் விஜய்க்கு ஜோடியாக வசீகரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் சிரிப்புக்கு இன்றுவரை மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்கள் விவாகரத்து குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடிக்கடி பல புகைப்படங்களை சினேகா இணையத்தில் பகிர்ந்து வருகிறார். புது வருடத்தை முன்னிட்டு இருவரும் தமிழ் கலாச்சார ஆடையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.