பிரபல பாடகர் மனோவுக்கு பிரபல பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 15 இந்திய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள தனது 38 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவின் ரிச்மாண்ட் காப்ரியல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனோ பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் இவர் பாடாத படங்களே இல்லை என்று சொல்லலாம்.  அந்த அளவுக்கு செம பிசியான பாடகராக வலம் வந்தார் மனோ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.