பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இந்நிலையில் தங்கலான் படத்தின் அப்டேட் அவருடைய பிறந்தநாளான நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பா.ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் நாளை டீசர் அல்லது பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.