தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் மாதவன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ராக்கெட்டரி திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். மாதவனின் மகன் வேதான் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

அதன்படி சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட அவர் மூன்று தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றார். இந்நிலையில் தற்போது வேதாந்த் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். மலேசியா சாம்பியன்ஷிப் என்ற அந்தத் தொடரில் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 1500 மீ பிரிவுகளில் வேதாந்த் தங்கம் வென்றுள்ளார். இவரது இந்த சாதனை இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.