ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரது வருங்கால மனைவியின் பெயர் தெரிய வந்தது..

சென்னை அணியின் முக்கிய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் ஜூன் 3 முதல் 4ம் தேதிக்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தியை அடுத்து, அவரது மனைவி யார் என்று பலரும் கேள்விகேட்டு வருகின்றனர். ‘இன்சைடர் ஸ்போர்ட்ஸ்.இன்’ அளித்துள்ள அறிக்கையில், ருதுராஜின் வருங்கால மனைவியின் பெயர் உத்கர்ஷா பவார்.

இருவரும் கடந்த சில வருடங்களாக ஒருவரையொருவர் அறிவார்கள். அவர்கள் பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, உத்கர்ஷாவும் ருதுராஜும் ஜிம்மில் ஒன்றாக காணப்பட்டனர். அதன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்குள் காதல் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை தொடங்கியது.

 

ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பும் திருமணம் செய்து கொள்வார் என்ற வதந்திகள் எங்கும் பரவி வருகின்றன. இந்த திருமணம் மும்பை தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியில் மாற்று வீரராக சேர சேர வாய்ப்பளித்துள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்விக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ருதுராஜ் ஜூன் 3-4 தேதிகளில் திருமணம் செய்து கொள்வதாகவும், இதனால் WTC இறுதிப் போட்டிக்கான அணியில் சேரப் போவதில்லை என்றும் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.